Arulmigu Lakshmi Narasimmaswamy Temple, Sholinghur - 631102, Ranipet District [TM001502]
×
Temple History
தல வரலாறு
தலவரலாறு
சோளிங்கர் என்று தற்போது வழங்கப்பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப்பெற்றுள்ளது என்பது பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம்.
புராண நூலின் படி இதன் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பது கால அளவின் ஒரு கூறு . அசலம் என்றால் மலை. இங்குள்ள மூலவரான யோக நரசிம்மரைப் பற்றிப் பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மூவரும் இத்திருத்தலத்தில் பதிகம் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் ( பெரிய திருமொழி)
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசை இருந்த
அக்காரத் கனியே அடைந்துய்ந்து போனேனே.
நம்மாழ்வார் மங்களாசாசனம் ( திருவாய்மொழி )
எக்காலத் தெந்தையாய் என்னுள் மண்ணில்
மற்றெக் காலத்திலும் யாதொன்றும்...தலவரலாறு

மற்றெக் காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேதவிமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே.
பேயாழ்வார் மங்களாசாசனம் ( மூன்றாம் திருவந்தாதி)
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டங் குறைவார்க்கு கோயில்போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண்பூங் கடிகை
இளங் குமரன் தன் விண்ணகர்.
மேலும் பிரகல்லாதன் முதலிய அடியவர்களுக்குக் கடிகை மாத்திரைப்பொழுதில் இம்மலை மீது யோக நிலையில் காட்சியளித்து முக்தியளித்ததால் கடிகாசலம் எனப்பெயர் பெற்றுள்ளது.
சோழர்களில் கரிகாற்சோழன் ஆட்சியில் தன் நாட்டை 48 கோட்டமாக பிரித்ததில் திருக்கடிகை நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு வேதம் முதலிய அரிய கலைகள் கற்பிக்கப்பட்ட காரணத்தினால் கடிகாசலம் எனப் புகழும் பெற்றது. சோளசிம்மபுரம் எனப் பெயர் பெற்றது. மலைத் திருக்கோயிலும் ஊரும் மிகப் பழமையானவை என்பதை மலைத்திருக்கோயிலில் உள்ள கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. பெரிய மலையில் 14 ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சிறிய மலையில் 17 ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
திருக்கோயிலின் புராண வரலாறு :
இந்திரத்யும்ன மஹாராஜா தனது மனைவியுடன் திருமலை திருப்பதிக்குச் சென்று திருமலை திருவேங்கடமுடையானைச் சேவித்துத் தங்களுக்குப் பெரு வீடு (மோட்சம்) வேண்டுமென்று பிரார்த்திக்க அதற்கு அவர் சோளிங்கபுரம் என்கிற திருக்கடிகைக் குன்றின் பெரியமலை மீது வீற்றிருக்கும் அருள்மிகு யோக நரசிம்ம சுவாமியிடம் சென்று வணங்கி வழிபட்டு உன்னுடைய பேற்றினைப் பெறுவாயாக என்று அருள் கூர்ந்தார்.
அதன்படி இந்திரத்யும்ன மகாராஜன் தன்னுடைய ஷத்திரிய தர்மத்திற்கு விரோதமாக சஸ்திர தியாகம் (ஆயுதங்கள்) செய்து நரசிம்மரை வழிபட்டார். அச்சமயம் ரிஷிகள் பகவானை வழிபட்டு தவம் செய்த போது, நிகும்பன் என்னும் அரக்கனாலே துன்பப்பட்டு வந்தார்கள்.
இந்திரத்யும்ன மன்னன் வந்தவுடன் அவரிடம் தங்களுடைய துயரத்தினைப் போக்க வேண்டும் என்று பிரார்த்திக்க அரசனும் தான் சஸ்திர தியாகம் செய்து விட்டபடியால் அரக்கருடன் போர் செய்ய இயலாது என்று கூற அதற்கு அவர்கள் மறுத்து உன்னுடைய ஷத்திரிய தர்மத்தை விட்டுவிட்டு வேறு தர்மத்தை எடுத்துக்கொள்வது பெரும் பயத்தை விளைவிக்கக் கூடியது. ஆகவே நீ எங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது உன்னுடைய தர்மமும் கடமையும் ஆகும் என்று தெரிவித்துவிட்டார்கள் அன்று இரவு அரசனும் ரிஷிகளும் தனது சங்கல்பத்தை மாற்ற முடியாமல் மிகவும் மனம் நொந்தார்கள். எம்பெருமான் நேரில் சேவை கொடுத்துச் சங்கல்பத்தை ரிஷிகளுடைய பிரார்த்தனையும் சிறிய மலையில் தியானம் செய்து வரும் சிறிய திருவடிக்கு (அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி) கார்த்திகை வெள்ளிக்கிழமை அன்று இந்திரத்யும்ன மகாராஜாவுக்குச் சகாயமாக நீ யுத்தம் செய்து நிகும்பன் என்ற அரக்கனை மாய்த்து வர வேண்டியது எனப் பணிந்து தனது சுதர்ஸன ஆழ்வாரைக் (சக்கரம்) கொடுத்து அனுக்கிரகித்து அனுப்பி வைத்தார்கள். அவ்வண்ணமே சிறிய திருவருடியும் அரக்கனைக் கொன்று அரசனுக்கு உதவியதாக ரிஷிக்கூட்டங்கள் மங்களத்தைச் செய்து வைத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும்.
ஆகவே ஞாயிற்றுக்கிழமை அன்று அருள் மிகு யோக ஆஞ்சநேய சுவாமி சங்கு சக்கரங்களைப் பெற்று ஸ்ரீ வைஷ்ணவ பரிபூரணத்தை அடைந்ததாக சரித்திரம் கூறுகிறது. அந்தச் சக்கரத்தைச் சிறிய மலையில் உள்ள புஷ்பகரணியில் (குளம்) திருமஞ்சனம் செய்து அதை பரிக்ரஹித்தார். அந்தக் குளத்திற்கு இன்றும் சக்கர தீர்த்தம் எனப்பெயர் வழங்கப்பட்டுவருகிறது.
கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை சக்கர தீர்த்தத்தில் நீராடி படிக்கட்டுகளில் படுத்து விரதம் இருந்தால் அவர்களுக்க அருள்மிகு யோக ஆஞ்சநேயர் சொப்பனத்தில் காட்சி கொடுத்து விருப்பத்தை நிறைவேற்றுவதை இன்றும் காணலாம். கார்த்திகை மாதத்தில் ஒவ்வொறு ஆண்டும் வெள்ளி, ஞாயிறு தினங்களில் பெரிய மலையில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் மற்றும் உற்சவம் நடத்தப்படுகிறது. அதே போல் சிறிய மலையிலும் ஞாயிறு அன்று அருள்மிகு யோக ஆஞ்சநேயருக்கும் சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் மற்றும் பிரார்த்தனைகள் உற்சவங்கள் விஷேசமாக இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது.
தல பெருமை
புராணங்களின் படி, நரசிம்மர் சப்த ரிஷியின் முன் தோன்றி அவர்களுக்கு முக்தியை அருளினார். இறைவன் 24 நிமிடங்களுக்குள் அவதரித்ததால், இந்த மலையில் 24 நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். எனவே, இந்த மலைக்கு கடிகாசலம் என்று பெயர் வந்தது, ஒரு கடிகை என்பது 24 நிமிடங்கள். நரசிம்மர் பிரஹலாதன் முன் யோக தோரணையில் தோன்றி முக்தி அளித்தார் என்றும் நம்பப்படுகிறது.
இக்கோயில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாக ஸ்தல வரலாறு மூலம் அறிய முடிகிறது. புராணங்களின் படி, அரக்கன் நிகும்பன் என்ற அசுரர்களைக் கொன்று போரின் போது இந்திரதிம்ன மன்னனுடன் ஆஞ்சநேயன் நின்று அவனுடைய அரசைக் காப்பாற்றினான். ஆஞ்சநேயர் இங்கு சங்கு சக்கரர்த்துடன் யோக தோரணையில் காட்சியளித்து வருகிறார். பக்தர்கள்...புராணங்களின் படி, நரசிம்மர் சப்த ரிஷியின் முன் தோன்றி அவர்களுக்கு முக்தியை அருளினார். இறைவன் 24 நிமிடங்களுக்குள் அவதரித்ததால், இந்த மலையில் 24 நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். எனவே, இந்த மலைக்கு கடிகாசலம் என்று பெயர் வந்தது, ஒரு கடிகை என்பது 24 நிமிடங்கள். நரசிம்மர் பிரஹலாதன் முன் யோக தோரணையில் தோன்றி முக்தி அளித்தார் என்றும் நம்பப்படுகிறது.
இக்கோயில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாக ஸ்தல வரலாறு மூலம் அறிய முடிகிறது. புராணங்களின் படி, அரக்கன் நிகும்பன் என்ற அசுரர்களைக் கொன்று போரின் போது இந்திரதிம்ன மன்னனுடன் ஆஞ்சநேயன் நின்று அவனுடைய அரசைக் காப்பாற்றினான். ஆஞ்சநேயர் இங்கு சங்கு சக்கரர்த்துடன் யோக தோரணையில் காட்சியளித்து வருகிறார். பக்தர்கள் சிறிய மலையேறுவதற்கு முன் சக்கர தீர்த்தத்தில் நீராடுகின்றனர்.
யோக நரசிம்மரை வழிபட 1305 படிகளை கடந்து மலையின் உச்சிக்கு சென்று வழிபட நரசிம்மர் பக்தர்களுக்கு வழிதுணையாக வந்து பக்தர்களின் துயர் துடைத்து அவர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றுவார்.
மேலும் இத்தலத்தில் நரசிம்மர் 11 மாதங்கள் யோக நிலையிலும் கார்த்திகை மாதமான ஒரு மாதத்தில் மட்டும் கண் திறந்து அருள்பாலிப்பதும் மற்றும் ஆஞ்சநேயர் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிப்பதும் இத்தலத்தின் பெருமை ஆகும்.
மேலும் இத்தலத்தில் பெருமாள் மலையில் யோக நரசிம்மராக மூலவராகவும், ஊர்த்திருக்கோயிலில் பக்தோசித பெருமாளாக உற்சவராக இருந்து அருள்பாலிப்பது மிகவும் விஷேசமாகும்.
புராண பின்புலம்
புராணங்களின் படி, நரசிம்மர் சப்த ரிஷியின் முன் தோன்றி அவர்களுக்கு முக்தியை அருளினார். இறைவன் 24 நிமிடங்களுக்குள் அவதரித்ததால், இந்த மலையில் 24 நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். எனவே, இந்த மலைக்குக் கடிகாசலம் என்று பெயர் வந்தது, ஒரு கடிகை என்பது 24 நிமிடங்கள். நரசிம்மர் பிரஹலாதன் முன் யோக தோரணையில் தோன்றி முக்தி அளித்தார் என்றும் நம்பப்படுகிறது.
இக்கோயில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாக ஸ்தல வரலாறு மூலம் அறிய முடிகிறது. புராணங்களின் படி, அரக்கன் நிகும்பன் என்ற அசுரர்களைக் கொன்று போரின் போது இந்திரதிம்ன மன்னனுடன் ஆஞ்சநேயன் நின்று அவனுடைய அரசைக் காப்பாற்றினான். ஆஞ்சநேயர் இங்கு சங்கு சக்கரர்த்துடன் யோக தோரணையில் காட்சியளித்து வருகிறார். பக்தர்கள்...புராணங்களின் படி, நரசிம்மர் சப்த ரிஷியின் முன் தோன்றி அவர்களுக்கு முக்தியை அருளினார். இறைவன் 24 நிமிடங்களுக்குள் அவதரித்ததால், இந்த மலையில் 24 நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். எனவே, இந்த மலைக்குக் கடிகாசலம் என்று பெயர் வந்தது, ஒரு கடிகை என்பது 24 நிமிடங்கள். நரசிம்மர் பிரஹலாதன் முன் யோக தோரணையில் தோன்றி முக்தி அளித்தார் என்றும் நம்பப்படுகிறது.
இக்கோயில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாக ஸ்தல வரலாறு மூலம் அறிய முடிகிறது. புராணங்களின் படி, அரக்கன் நிகும்பன் என்ற அசுரர்களைக் கொன்று போரின் போது இந்திரதிம்ன மன்னனுடன் ஆஞ்சநேயன் நின்று அவனுடைய அரசைக் காப்பாற்றினான். ஆஞ்சநேயர் இங்கு சங்கு சக்கரர்த்துடன் யோக தோரணையில் காட்சியளித்து வருகிறார். பக்தர்கள் சிறிய மலையேறுவதற்கு முன் சக்கர தீர்த்தத்தில் நீராடுகின்றனர்.
யோக நரசிம்மரை வழிபட 1305 படிகளைக் கடந்து மலையின் உச்சிக்குச் சென்று வழிபட நரசிம்மர் பக்தர்களுக்கு வழிதுணையாக வந்து பக்தர்களின் துயர் துடைத்து அவர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றுவார்.